கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் விலை உயர்வு


கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் விலை உயர்வு
x

கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் விலை உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் பழங்களில், பிளம்ஸ் பழம் முக்கியமானது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிளம்ஸ் பழங்கள் சீசன் ஆகும். அப்போது கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் அதிக அளவில் காய்க்கும். மேலும் ஜனவரி மாதத்தில் 2-வது சீசனாக பிளம்ஸ் பழங்கள் ஒருசில இடங்களில் காய்க்கும்.

இந்தநிலையில் 2-வது சீசனையொட்டி தற்போது கொடைக்கானல் வடகவுஞ்சி, பேத்துப்பாறை, பள்ளங்கி உள்பட பல்வேறு பகுதிகளில் பிளம்ஸ் பழங்கள் அதிக அளவில் காய்த்துள்ளன. மேலும் அந்தந்த பகுதிகளில் பிளம்ஸ் பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பிளம்ஸ் பழங்கள் ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை ஆகிறது. ஆனால் பிளம்ஸ் பழங்களின் விலை அதிகமாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கோடை பிளம்ஸ் என்று அழைக்கப்படும் பிளம்ஸ் பழங்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. குறைந்த அளவில் விளைச்சல் உள்ளதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பழங்களின் வரத்து அதிக அளவு இருக்கும். அப்போது அவற்றின் விலை வெகுவாக குறையும் என்றனர்.


Related Tags :
Next Story