பிளஸ்-1 தேர்வை 35,749 மாணவ-மாணவிகள் எழுதினர்


பிளஸ்-1 தேர்வை 35,749 மாணவ-மாணவிகள் எழுதினர்
x

சேலம் மாவட்டத்தில் 155 மையங்களில் பிளஸ்-1 தேர்வை 35 ஆயிரத்து 749 மாணவ-மாணவிகள் எழுதினர். 2 ஆயிரத்து 667 பேர் தேர்வு எழுத வரவில்லை.

சேலம்

சேலம் மாவட்டத்தில் 155 மையங்களில்பிளஸ்-1 தேர்வை 35 ஆயிரத்து 749 மாணவ-மாணவிகள் எழுதினர். 2 ஆயிரத்து 667 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பிளஸ்-1 தேர்வு

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் 155 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. பிளஸ்-1 தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்து 200 மாணவர்கள், 20 ஆயிரத்து 216 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தேர்வின் முதல்நாளான நேற்று, தமிழ் மொழி தேர்வு நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாணவ, மாணவிகள் அவரவர் தேர்வு மையத்திற்கு வரத் தொடங்கினர்.

பறக்கும் படை

நேற்று நடந்த தேர்வை, 16 ஆயிரத்து 625 மாணவர்கள், 19 ஆயிரத்து 124 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 749 பேர் எழுதினர். 63 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 667 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு அறைகளை பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.


Next Story