பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
பெரம்பலூர்
பிளஸ்-1 எனப்படும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தமிழ் தேர்வுடன் தொடங்குகிறது. இந்த பொதுத்தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 33 மையங்களில் 80 பள்ளிகளை சேர்ந்த 3,692 மாணவர்களும், 3,605 மாணவிகளும் என மொத்தம் 7,297 பேர் எழுதவுள்ளனர். தனித்தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 44 மையங்களில் 90 பள்ளிகளை சேர்ந்த 4,004 மாணவர்களும், 4,366 மாணவிகளும் என மொத்தம் 8,370 பேர் எழுதவுள்ளனர். தனித்தேர்வர்களாக 49 ஆண்களும், 48 பெண்களும் என மொத்தம் 97 பேர் 2 மையங்களில் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி தொடங்குகிறது.
Related Tags :
Next Story