பிளஸ்-1 மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி


பிளஸ்-1 மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
x

பிளஸ்-1 மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

திருச்சி

வையம்பட்டி, செப்.3-

வையம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பெற்றோர் திட்டியதால் மன வேதனைக்கு ஆளான மாணவி நேற்று உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வந்துள்ளார். அந்த மாணவி சோர்வாக இருப்பதை அறிந்த ஆசிரியர்கள் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மாணவியின் தந்தை பள்ளிக்கு செல்லவே மாணவி, பள்ளியின் மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். அப்போது அங்கு நின்ற மாணவர்கள் மாணவியை பிடித்தனர். இதனால் மாணவி காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story