பிளஸ்-1 மாணவி தற்கொலை


பிளஸ்-1 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 12 April 2023 12:30 AM IST (Updated: 12 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை அருகே பொதுத்தேர்வை சரியாக எழுதாததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

குஜிலியம்பாறை அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் குப்புசாமி. டிரைவர். அவருடைய மகள் மோகனா (வயது 17). இவர், கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்வை மோகனா சரிவர எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மோகனா, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மோகனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story