பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

சங்கராபுரம் அருகே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தாயை பார்க்க விடாத விரக்தியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகள் அபிநயா (வயது 16). இவர் சங்கராபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் அஜித் என்பவருடன் அபிநயா பழகி வந்ததாக தெரிகிறது. மேலும் சம்பவத்தன்று அஜித், அபிநயாவை வெளியில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த அபிநயாவின் தாய் மதுராம்பாள் விஷம் குடித்து விட்டார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவரை, அபிநயா மற்றும் அஜித்தின் உறவினர்கள் பார்க்க வந்தனர். அப்போது மதுராம்பாளின் உறவினர்கள், அபிநயா மற்றும் அஜித்தின் உறவினர்களை பார்க்க அனுமதிக்கவில்லை.

போலீசார் விசாரணை

இதில் மனவேதனை அடைந்த அபிநயா, அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை அபிநயா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.


Next Story