பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Jun 2023 1:16 AM IST (Updated: 22 Jun 2023 5:35 PM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த முகவனூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். லாரி டிரைவர். இவரது மகன் ராகுல் தர்ஷன் (வயது 15). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த ராகுல் தர்ஷன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story