செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம் எழுநாச்சிபுரம் காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகள் காவியா (வயது 17). இவர் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் காவியா தனக்கு செல்போன் வாங்கி தரவேண்டும் என அவரது பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார். அதற்கு சுப்பிரமணியன் பணம் வரட்டும், வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். நேற்று முன்தினம் காவியா தனது அக்காள் தேவிகாவின் செல்போனை பயன்படுத்தி உள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த காவியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.