லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி பிளஸ்-1 மாணவர் பலி


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி பிளஸ்-1 மாணவர் பலி
x

குன்னம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்

பிளஸ்-1 மாணவர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். இவருடைய மகன் திருவேங்கடம் (வயது 16). இவர் வரிசைபட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற திருவேங்கடம் மாலை தனது விளையாட்டு ஆசிரியர் செந்துறை குமிழியனியத்தை சேர்ந்த புஷ்பராஜ் என்பவரது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து ெசன்று கொண்டிருந்தார்.

கொளப்பாடி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு ஆசிரியர் கலியமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்றது. அதனை பார்த்த திருவேங்கடம் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கினார்.

பலி

பின்னர் கலியமூர்த்தியின் மோட்டார் சைக்கிளை சரி செய்து தருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மாட்டின் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பியபோது எதிரே வந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் திருவேங்கடத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story