பிளஸ்-2 தேர்வு முடிவுகள் - மதுரையில் 96.89 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு முடிவுகள் - மதுரையில் 96.89 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x

மதுரையில் பிளஸ் -2 பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மதுரை,

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை,மேலூர்,உசிலம்பட்டி,திருமங்கலம் கல்வி மாவட்டங்களில் அதிக அளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 பொதுத் தேர்வில் மதுரை மாவட்டத்தில் 34, 828 பேர் தேர்வு எழுதியதில் 33 ஆயிரத்து 745 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 17,412 பேரும் மாணவர்கள் 16,333 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்களில் 95.15 சதவீதம் பேரும், மாணவிகளில் 98.58 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த சராசரி தேர்ச்சி விகிதம் 96.89 சதவீதமாகும். இதன் மூலம் தமிழகத்தில் மதுரை மாவட்டம் 5-வது இடத்தை பிடித்துள்ளது.


Next Story