பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை


பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை
x

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

முசிறி:

தேர்வு எழுதினார்

திருச்சி மாவட்டம், முசிறியில் துறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 59). இவருடைய மகள் வர்ஷா(20). கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் இந்த ஆண்டு அவர் வீட்டில் இருந்தபடியே படித்து, தனித்தேர்வராக பிளஸ்-2 ெபாதுத்தேர்வு எழுதினார். தேர்வுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் அவர் இருந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இதையடுத்து கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்த எலிபாசாணத்தை(விஷம்) அவர் தின்றுவிட்டார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாலசுப்பிரமணியன் முசிறி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story