பெற்றோர் திட்டியதால் பிளஸ்-2 மாணவர் தீக்குளித்து தற்கொலை
பொறுப்பே இல்லாமல் இருக்கிறாய் என்று பெற்றோர் திட்டியதால் பிளஸ்-2 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வந்தவாசி
பொறுப்பே இல்லாமல் இருக்கிறாய் என்று பெற்றோர் திட்டியதால் பிளஸ்-2 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரபு. இவரது மனைவி மலர். இவர்களது மகன் அன்பரசன் வயது 18 கடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். எனினும் 285 மதிப்பெண்கள் மட்டுமே அவர் பெற்றார். கடந்த வெள்ளிக்கிழமை காலை அன்பரசன் வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது அவரது பெற்றோர் பொறுப்பே இல்லாமல் இருக்கிறாய் என்று அன்பரசனை திட்டினராம்.
இதனால் மனமுடைந்த அன்பரசன் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அன்பரசனை பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறறந்து விட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் தெள்ளார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.