பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

அடுக்கம்பாறை

பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலுார் மாவட்டம், அடுக்கம்பாறையை அடுத்த ஆற்காட்டான்குடிசை கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் திலகா (வயது 17), பென்னாத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வை எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். தற்போது விடுமுறையில் வீட்டில் இருந்த திலகா வீட்டு வேலை செய்யாமல் அடிக்கடி செல்போனில் நேரத்தை செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

இதில், மனமுடைந்த திலகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story