துறையூரில் பிளஸ்-2 மாணவி தற்கொலை
மதிப்பெண் குறைவாக எடுத்ததை கண்டித்ததால் துறையூரில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்
துறையூர், ஜூன்.21-
துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூக்கன் - அனுராதா தம்பதியின் மகள் அனுசுயா (வயது 19). இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் அனுசுயா 600-க்கு 383 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஏன் குறைவான மதிப்பெண் பெற்று இருக்கிறாய் என கூறி அவரது தாய் திட்டினாராம். இதனால் மனம் உடைந்த அனுசுயா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இந்த நிலையில் மகள் தற்கொலை செய்ததை அறிந்த தாய் அனுராதாவும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்். இந்த சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.