அரூர் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை


அரூர் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
x

அரூர் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

அரூர்:

பிளஸ்-2 மாணவி

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பொருசுமரத்துவலவு கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி, விவசாயி. இவருடைய மகள் ஜோதி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ஜோதிக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்தார். இதுபற்றி அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மாணவியை மீட்டு சிட்லிங் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

சாவு

பின்னர் சேலம் அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜோதி இறந்தார்.

பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story