தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை
x

தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் காரைக்கால் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் சிவமகா(வயது16). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரை பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு அவரது தாயாரும், சகோதரியும் நேற்று முன்தினம் மதியம் திரைப்படம் பார்ப்பதற்காக கும்பகோணம் சென்று விட்டனர். இதனால் மனமுடைந்த சிவமகா தனது வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story