பிளஸ்-2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்


பிளஸ்-2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்
x

பிளஸ்-2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் பண்ருட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயதுடைய சிறுமியை கடத்தி சென்றார். இது குறித்து மாணவியின் தாய் பண்ருட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவின் பேரில் தனி படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், தமிழ்ச்செல்வனை தேடி வந்தனர். இந்த நிலையில் வெளியூரில் இருந்த தமிழ்ச்செல்வனை போலீசார் மடக்கி பிடித்ததோடு, அவரிடம் இருந்து மாணவியை மீட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ்ச்செல்வன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.


Next Story