மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவன் பலி
மோகனூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவன் பலியானான். அவனுடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
மோகனூர்;
மோகனூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவன் பலியானான். அவனுடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
பிளஸ்-2 மாணவர்
விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே லத்துவாடியை சேர்ந்த சின்னுசாமி மகன் ஹரிஷ் (வயது 17). நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்த தருண்குமார் என்ற வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.
தருண்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அங்குள்ள கோழி பண்ணை பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிளில் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பாலத்தில் மோதியது.
சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹரிசை பரிசோதனை செய்த அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். காயம் அடைந்த தருண்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மோகனூர்் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்னர்.