சத்து மாத்திரைகளை தின்ற பிளஸ்-2 மாணவி சிகிச்சை பலனின்றி சாவு


சத்து மாத்திரைகளை தின்ற பிளஸ்-2 மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 14 March 2023 1:28 AM IST (Updated: 14 March 2023 1:00 PM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே அதிக சத்து மாத்திரைகளை தின்ற பிளஸ்-2 மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

இரணியல் அருகே அதிக சத்து மாத்திரைகளை தின்ற பிளஸ்-2 மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பிளஸ்-2 மாணவி

தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்தவர் அஸ்மிதா (வயது17). நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு ஒரு தம்பியும் உள்ளார். இவர்களின் தாயார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவியின் தந்தையும் அவர்களை விட்டு பிரிந்து சென்றார்.

இதனால் மாணவியும், அவரது தம்பியும் இரணியல் அருகே தாய் மாமாவின் பராமரிப்பில் இருந்தனர்.

தாயார் மரணம், தந்தை பிரிந்து சென்ற விவகாரத்தால் மாணவி அஸ்மிதா மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த சமயத்தில் அவரை உறவினர்கள் தேற்றினர்.

இந்தநிலையில் அஸ்மிதா கடந்த 11-ந் தேதி திடீரென வீட்டில் இருந்த சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பரிதாப சாவு

இதனால் மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு மாணவி அஸ்மிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story