பிளஸ்-௨ மாணவி தற்கொலை


பிளஸ்-௨ மாணவி தற்கொலை
x

பிளஸ்-௨ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

வெள்ளியணை அருகே உள்ள ஜெகதாபி ஊராட்சி துளசிகொடும்பை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி தேவி. இத்தம்பதியின் மகள் விமலா(17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். வருகிற 13-ந்தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்க உள்ளதால், விமலா வீட்டில் இருந்து படித்து வந்தார். மேலும், அவருக்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விமலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லை.

இந்தநிலையில் நேற்றும் வழக்கம்போல் விமலாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விமலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விமலாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story