சென்னை வரும் பிரதமர் மோடி, தொடங்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன.. - சந்திக்க போவது யார் யார்..?
பிரதமரின் வருகையை ஒட்டி 8-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ட்ரோன்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி வரும் 8-ஆம் தேதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 8-ஆம் தேதி சென்னை வரும் அவர், வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடக்கி வைப்பதுடன், மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து, பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் உரையாற்றிய பிறகு விமானத்தில் கேரளா செல்கிறார். எனவே, பிரதமரின் வருகையை ஒட்டி 8-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ட்ரோன்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
Related Tags :
Next Story