தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!


தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!
x

பிரதமர் நரேந்திர மோடி தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். கவர்னர் மாளிகையில் நடைபெறும் இந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் செயல்படும் தமிழக பாஜக உயர்நிலைக்குழு உறுப்பினர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக பிரநிதித்துவம் பெறுவது பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தமிழக அரசியலில் பாஜக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

ஏறக்குறைய 10 மணிக்கு தொடங்க உள்ள இந்த ஆலோசனைக் கூட்டமானது சுமார் 1 மணி நேரம் வரை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Next Story