பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, 'மேலப்பாவூர் பகுதியில் கடந்த 2-ந்தேதி கோவில் கொடை விழா நடந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு பிரிவினர் அவர்களது தலைவர் தலைமையில் கொடி ஏற்றி உள்ளனர். அவர்கள் மற்றொரு பிரிவினரை தாக்கி பேசினர். இதனால் அவரை கைது செய்ய வேண்டும்' என்று தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story