இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர் டாக்டர் ராமதாஸ்- பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர் டாக்டர் ராமதாஸ் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கடத்தூர்
இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர் டாக்டர் ராமதாஸ் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
டாக்டர் ராமதாஸ்
கோபியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்த திருமண விழாவில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு பாட்டாளி மக்கள் கட்சியில் மாற்றங்கள் நடந்து வருகின்றன பாட்டாளி மக்கள் கட்சியின் அணுகுமுறையும் மாறி உள்ளது.
டாக்டர் ராமதாசும், பழனி பாபாவும் இணைந்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர். முஸ்லிம்களுக்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் வன்னியர்களோடு இணைந்து போராட்டம் நடந்துள்ளது. சமூக நீதி என்று சொன்னாலே மருத்துவர் ராமதாஸ் நினைவு தான் வரும். இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து பெற்றுத் தந்தவர் அவர். இது சாதாரண வரலாறு இல்லை.
சாதனையாளர்
இந்தியாவில் எந்த பொறுப்பும் இல்லாதவர் மிகப்பெரிய போராளி சாதனையாளர் டாக்டர் ராமதாஸ் தான். முஸ்லிம் சமுதாயத்தினர் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவருக்கு உறுதுணையாக இருப்பவர் ராமதாஸ் தான். உணர்வுபூர்வமாக, ஆக்கபூர்வமாக அரசியல் செய்பவர் அவர்தான்.
தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், சிறுபான்மை மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.