இடங்கணசாலை நகராட்சி கூட்டத்தில் பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


இடங்கணசாலை நகராட்சி கூட்டத்தில் பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

இடங்கணசாலை நகராட்சி கூட்டத்தில் பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சேலம்

இளம்பிள்ளை:

இடங்கணசாலை நகராட்சி கூட்டம் நேற்று நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் தளபதி, ஆணையாளர் நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ம.க. கவுன்சிலர்கள் மணி, மாதேஷ், மூர்த்தி, ராஜேந்திரன், மகாலிங்கம், அமுதாராஜா ஆகியோர் தங்கள் பகுதியில் திட்டப்பணிகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும், வரவு- செலவு கணக்குகளை அறிவிக்க வேண்டும் எனக்கூறியும் கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தலைவர் கமலக்கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story