பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம்


பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம்
x

ராணிப்பேட்டையில் பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை நகர தலைவர் கஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர்கள் எம்.கே.முரளி, கே.எல்.இளவழகன், வக்கீல் சரவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் எஸ்.பி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 17-ந் தேதி வாலாஜாபேட்டையில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி நடைபெற உள்ள பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் டாக்டர் ராமதாசுக்கு பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளிப்பது, திண்டிவனம்- நகரி ெரயில் பாதை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் அறவழி போராட்டத்தில் ஈடுபடுவது, என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story