பா.ம.க. கொடியை டாக்டர் ராமதாஸ் ஏற்றினார்
வந்தவாசியில் பா.ம.க. கொடியை டாக்டர் ராமதாஸ் ஏற்றினார்
திருவண்ணாமலை
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வீரவணக்க நாளையொட்டி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.
இதையொட்டி வந்தவாசி குளத்துமேடு பகுதியில் 84 அடி உயர வன்னியர் சங்க கொடிக் கம்பமும், கீழ்சாத்தமங்கலம் கூட்டுச் சாலையில் 73 அடி உயர பா.ம.க. கொடிக் கம்பமும் அமைக்கப்பட்டிருந்தது.
விழாவுக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் அ.கணேஷ்குமார் தலைமை தாங்கினார்.
கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மச்சேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பேட்டரி வரதன் வரவேற்றார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 2 இடங்களிலும் கொடியேற்றினார்.
விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மண்ணப்பன், மாவட்ட அமைப்பு செயலாளர் சக்திவேல், ஒன்றியக்குழு துணைத்தலைவர் விஜயன், மாவட்ட தலைவர் செம்பூர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story