முதல்-அமைச்சருக்கு பா.ம.க. சார்பில் தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம்
10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக்கோரி முதல்-அமைச்சருக்கு பா.ம.க. சார்பில் தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.
திருவண்ணாமலை நகர பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மே மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவேற்றக் கோரி தமிழக முதல்- அமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தலைவருக்கும் தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம் திருவண்ணாமலை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்றது.
பா.ம.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் ப.பக்தவச்சலம் தலைமை தாங்கினார்.
வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாராயசாமி, மாவட்டத் தலைவர் பெரியசாமி, பா.ம.க. நகர செயலாளர் உதயராகவன், தலைவர் ரவி, இளைஞர் அணி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர் தினேஷ்குமார் வரவேற்றார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பா.ம.க. மாவட்ட செயலாளர் கூறுகையில், தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வன்னியர்கள் வாழ்ந்து வருகின்றனர். 2020- 21-ல் நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி 10.5 சதவீதம் வன்னியர் உள் ஒதுக்கீடு பெற்றோம்.
இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தது.
கடந்த கல்வியாண்டிலேயே வன்னியர்கள் இடஒதுக்கீடு கிடைக்கவில்லை.
2023-24-ம் கல்வி ஆண்டிலாவது எங்களின் நியாயமான கோரிக்கையான 10.5 சதவீது இடஒதுக்கீடு கிடைக்க தமிழக அரசு வருகிற மே மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவேற்றி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார்.