பா.ம.க. சார்பில் முதல்-அமைச்சருக்கு கடிதம்
10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க. சார்பில் முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி அணைக்கட்டு மேற்கு ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நீதிபதிக்கும் ஆயிரம் கடிதங்கள் அனுப்பும் நிகழ்ச்சி நஒடுகத்தூர் தபால் நிலைய அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பி.கே.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் சம்பத், ஒன்றிய தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
அப்போது மாவட்ட செயலாளர் இளவழகன் கூறுகையில், 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் தபால்களை ஒரே நேரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நீதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து இது போன்ற கடிதங்கள் அனுப்பப்படும் என்றார்.