பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நாகப்பட்டினம்

பா.ம.க. நாகை மாவட்ட செயலாளர் சித்திரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகையில் உள்ள தேவேந்திர திருமண மகாலில் இன்று(ஞாயிற்றுக்கிழமை மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பா.ம.க. 2.0 செயல்திட்டங்கள் மற்றும் கட்சியை மேலும் வலுப்படுத்த தேவையான ஆலோசனைகள், வளர்ச்சிகள் குறித்து பா.ம.க. மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகிறார். நிகழ்ச்சிக்கு பா.ம.க. நாகை மாவட்ட செயலாளர் சித்திரவேல் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள பா.ம.க.கட்சி பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட, மாநில நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story