பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
சேலம்

சேலம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 5 ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் வக்கீல் விஜயராசா தலைமை தாங்கினார். மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப்பணிகள், வாக்குச்சாவடி மையம் அமைத்தல் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட அமைப்பு தலைவர் ராஜமூர்த்தி, அமைப்பு செயலாளர் செல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் லட்சுமணன், நரசிம்மன், ரத்தினவேல், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சிவராமன், ஒன்றிய செயலாளர்கள் பச்சமுத்து, மாது, அறிவழகன், மோகன்ராஜ், முனியப்பன், செந்தில்குமார், மாதேஸ்வரன், பழனிசாமி, மாரியப்பன், கிருஷ்ணகுமார், ரமேஷ், நகர நிர்வாகிகள் பொன்னுதுரை, வேணு, சிங்கபுரம் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story