விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் பா.ம.க. கூட்டத்தில் வலியுறுத்தல்


விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்  பா.ம.க. கூட்டத்தில் வலியுறுத்தல்
x

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பா.ம.க. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடலூர்


நெய்வேலி,

பாட்டாளி மக்கள் கட்சியின் நெய்வேலி வடக்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் வடக்குத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் தவநாதன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், மாவட்ட பசுமை தாயக செயலாளர் ராஜசேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் நடராஜன், நெய்வேலி நகர செயலாளர் சார்லஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், நெய்வேலி வடக்கு ஒன்றியத்தில் 45 ஒன்றிய பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்கள் பெறுவது, நெய்வேலி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடியேற்றுவது, என்.எல்.சி.யில் சுற்றிலும் உள்ள கிராமப்புற படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது, என்.எல்.சி. மாற்று குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு என்.எல்.சி. நிறுவனம் உடனே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், விக்கிரவாண்டி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க ணே்டும் இல்லையெனில் பா.ம.க.சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய தலைவர் முத்துராமன், ஒன்றிய இளைஞர் சங்க தலைவர் வேலு, ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் பாலவிஜய், மாணவர் சங்க நிர்வாகிகள் ராஜசிம்மன், தமிழ்ச்செல்வன், குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் சரவணன், ஒன்றிய துணைத்தலைவர் இந்திரஜித், இளைஞர் சங்க நிர்வாகிகள் பாபு, குகனேசன், மாயகிருஷ்ணன், முருகானந்தன், மணிகண்டன் உள்பட பா.ம.க.வினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் மோட்சராகினி நன்றி கூறினார்.


Next Story