தூத்துக்குடியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் பா.ம.க.வினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகே ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட பா.ம.க. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் கணேசன் வரவேற்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மத்திய மாவட்ட நிர்வாகிகள், தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை அமைப்பு தலைவர் கருப்பசாமி, மாநில தொழிற்சங்க துணைச் செயலாளர் ராமச்சந்திரன், இளைஞர் சங்க துணை தலைவர் மகாராஜன், வடக்கு மாவட்ட தலைவர் மாடசாமி, தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன், மாநில துணைத்தலைவர் வள்ளிநாயகம், தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள், உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய மாவட்ட பொருளாளர் காளியம்மாள் நன்றியுரை ஆற்றினார்.


Related Tags :
Next Story