பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குடியாத்தத்தில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியாத்தம் குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் என்.குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட அமைப்பு செயலாளர்கள் பாலாஜி, பாபுயாதவ், வன்னியர் சங்க செயலாளர் பாபு, மாவட்ட துணை தலைவர் கோபி, ஒன்றிய செயலாளர்கள் காமராஜ், அரவிந்தன், இளம்பரிதி, காந்தி ராமலிங்கம், முருகன், நகர செயலாளர்கள் ரமேஷ், குமார், முகமதுபாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கவுண்டன்ய மகாநதியில் மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீதும், கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடத்தப்பட்ட மண் மற்றும் மணலை தமிழக அரசு மதிப்பீடு செய்து அந்த பணத்தை வசூலித்து அரசு கணக்கில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் குணசீலன், கோப, அன்பரசு, முரளி, பூபதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் குமரேசன், அசோகன், ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.