பா.ம.க. பிரமுகர் படுகொலை: கைதான 10 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி


பா.ம.க. பிரமுகர் படுகொலை: கைதான 10 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
x

பா.ம.க. பிரமுகர் படுகொலை: கைதான 10 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி விசாரணையை விரைந்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மதமாற்றத்தை தட்டிக்கேட்டதாக பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம், 2019-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக முகமது அசாருதீன் உள்பட 13 பேரை தேசிய புலனாய்வு முகமை அமைப்பு (என்.ஐ.ஏ.) கைது செய்தது.

இவர்களில் முகமது அசாருதீன், முகமது ரியாஸ், நிஜாம் அலி, சர்புருதீன், முகமது ரிஸ்வான், முகமது பாரூக், சாலி, முகமது தவ்பீக், முகமது பர்வீஸ், தவ்பீக் பாட்சா ஆகிய 10 பேர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் ஆகியோர், 'மனுதாரர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை முடிந்தால் உடனடியாக குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளதை கீழ்கோர்ட்டு புறக்கணித்துள்ளது. இதேநிலை நீடித்தால் வழக்கில் சாட்சி விசாரணை முடிய மேலும் 10 ஆண்டுகள் ஆகும். சாட்சிகளின் விசாரணையையும், குறுக்கு விசாரணையையும் கீழ்கோர்ட்டு விரைந்து முடிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.


Next Story