ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை முன் பி.எம்.எஸ். சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை முன் பி.எம்.எஸ். சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை முன் பி.எம்.எஸ். சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
ஆரல்வாய்மொழியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, தினக்கூலி தொழிலாளர்களின் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்பாலை முன்பு பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் (பி.எம்.எஸ்.) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு கன்யாஸ்பின் (ஆலை) பி.எம்.எஸ். தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். செயல்தலைவர் பூதலிங்கம், துணைத்தலைவர்கள் பாஸ்கரன், ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் இசக்கியப்பன், அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர். தமிழக பஞ்சாலை மாநில பொதுச்செயலாளர் சிதம்பரசாமி, மாவட்ட அமைப்பாளர் குமாரதாஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் முருகன், செயலாளர்கள் பேபி, பாரத ரத்னா, ஒன்றிய பி.எம்.எஸ்.தலைவர் ஆறுமுகம்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.