5 பேர் மீது போக்சோ வழக்கு
சிறுமிக்கு கட்டாய திருமணம்-5 பேர் மீது போக்சோ வழக்கு
விருதுநகர்
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியரின் 17 வயது மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் சிறுமி என தெரிந்தும் அவரது பெற்றோர் அதே ஊரைச் சேர்ந்த வாலிபருக்கு அவர்களது பெற்றோரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். பிரசவத்திற்காக அந்த சிறுமியை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் நிலைய போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி சிறுமியின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டம், குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story