பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ' வழக்கு
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
திருவையாறு:
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
15 வயது மாணவி
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வளம்பக்குடி மேலகாலனியை சேர்ந்த பெரியசாமி மகன் சந்தோஷ் (வயது23). இவர் 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்தார். மேலும் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
5 மாத கர்ப்பம்
இந்த நிலையில் அந்த மாணவிக்கு நேற்று முன்தினம் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை உடனடியாக தஞ்சையில் உள்ள ராஜாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அந்த மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி மூலமாக திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாணவியிடம் வாக்குமூலம்
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சையில் இருந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர்.
இதைத்தொடர்ந்து சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.