தொழிலாளி மீது போக்சோ வழக்கு


தொழிலாளி மீது போக்சோ வழக்கு
x

தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வரும் நிலையில் அதே பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வரும் வாலிபர் ஒருவர் அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் காந்திநகர் அருகே உள்ள தனது சகோதரி வீட்டுக்கு கடத்திச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story