பொதும்பு அம்மச்சியம்மன், சங்கையா கோவில் திருவிழா - எருதுகட்டில் 8 பேர் படுகாயம்
பொதும்பு அம்மச்சியம்மன், சங்கையா கோவில் திருவிழாவில் எருதுகட்டில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்
சமயநல்லூர்,
மதுரை அருகே பொதும்பு அம்மச்சியம்மன், சங்கையா கோவில் திருவிழா நடந்துவருகிறது. இந்த விழாவையொட்டி தினந்தோறும் அம்மன் மற்றும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் அர்ச்சனை நடந்தது. இதில் முக்கிய நிகழ்ச்சியான எருதுகட்டு நடந்தது. பொதும்பு மந்தை திடலில் வைக்கோலால் பின்னப்பட்ட வடத்தில் காளைகள் பூட்டப்பட்டன. முதலில் சங்கையா, அம்மச்சியம்மன் கோவில் காளைகள் அவிழ்கப்பட்டு மரியாதை செய்யப் பட்டது. அதன்பின் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 13 ஜல்லிகட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வடத்தில் பூட்டி அவிழ்கப்பட்டன. ஒவ்வொரு காளையும் 20 நிமிடம் வடத்தில் பூட்டப்பட்டு விளையாடின. இதில் சிறப்பாக விளையாடிய காளைகளுக்கு திருவிழா குழுவினர் சார்பில் பரிசுகள் வழங்கங்கப்பட்டன. எருதுகட்டில் காளைகள் முட்டியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.விழாவில் அலங்கா நல்லூர், பொதும்பு, கோவில் பாப்பாகுடி, அதலை, பரவை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.