பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை-பேச்சு போட்டி


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை-பேச்சு போட்டி
x
தினத்தந்தி 28 Jun 2023 12:30 AM IST (Updated: 28 Jun 2023 1:38 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை-பேச்சுப் போட்டி நடந்தது.

திண்டுக்கல்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் சுபலட்சுமி, அனிஷாபேகம், காளீஸ்வரி ஆகியோரும், கட்டுரை போட்டியில் தனபிரியா, யுவஸ்ரீ, துர்கா ஆகியோரும், பேச்சு போட்டியில் ராஜாஜி, வர்ஷினி, தனிஷா ஆகியோரும் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றனர்.

அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டியில் சர்வேஸ்வரி, லீலா, நாகலட்சுமி ஆகியோரும், கட்டுரை போட்டியில் மகாராணி, அமிர்தசக்தி, நந்தினி ஆகியோரும், பேச்சு போட்டியில் நாகஅர்ஜூன், சர்மிளா, சுபலட்சுமி ஆகியோரும் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றனர். இதில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ செய்து இருந்தார்.


Next Story