வாகனம் மோதி புள்ளிமான் செத்தது
திருச்சி அருகேவாகனம் மோதி புள்ளிமான் செத்தது
திருச்சி
துவரங்குறிச்சி, ஜூன்.29-
துவரங்குறிச்சி அடுத்த சேத்துப்பட்டு வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு புள்ளிமான் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று புள்ளிமான்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் துவரங்குறிச்சி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக துவரங்குறிச்சி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story