விஷப்பூச்சி கடித்து மூதாட்டி சாவு


விஷப்பூச்சி கடித்து மூதாட்டி சாவு
x

திருக்காட்டுப்பள்ளி அருகே விஷப்பூச்சி கடித்து மூதாட்டி உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள செந்தலை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னாமணி (வயது70). இவர் தனது வீட்டின் பின்புறம் அடுப்பு எரிப்பதற்காக தென்னை மட்டை எடுத்தபோது அவரை விஷப்பூச்சி(செங்குழவி) கடித்துவிட்டது. இதனால் மயங்கி விழுந்த பொன்னாமணியை தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அக்கம்பக்கத்தினர் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story