வறுமையால் விஷம் குடித்து பெண் தற்கொலை
ராஜபாளையம் அருகே வறுமையின் காரணமாக விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜபாளையம்.
ராஜபாளையம் அருகே வறுமையின் காரணமாக விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலை முயற்சி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரம் அரண்மனை தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 52). இவருடைய மனைவி குட்டிராணி(40). இவர்களுக்கு கலைவாணி (22) உள்பட 3 மகள்கள். நாகராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் குட்டிராணி தான் குடும்பத்தை கவனித்து வந்தார்.
இந்தநிலையில் வறுமையின் காரணமாக மன வேதனையில் இருந்த குட்டிராணி, கலைவாணி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்ைசக்காக சேர்த்தனர்.
பெண் சாவு
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கலைவாணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். குட்டிராணி தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து குட்டிராணியின் அண்ணன் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரின், ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் ்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையின் காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.