விஷம் குடித்த மாணவர் சாவு


விஷம் குடித்த மாணவர் சாவு
x

விஷம் குடித்த மாணவர் உயிரிழந்தாா்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சியை அடுத்த மட்டப்பாறையை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் மணிராஜ் (வயது 19). எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இவர் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி அவரது பெற்றோர் கேட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மணிராஜ், விஷத்தை (எலிபேஸ்ட்) எடுத்து சாப்பிட்டார். இதையடுத்து சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டது.இதையடுத்து சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story