தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது விஷ வண்டுகள் கடித்து தொழிலாளி சாவு- கோபி அருகே பரிதாபம்
கோபி அருகே தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது விஷ வண்டுகள் கடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கடத்தூர்
கோபி அருகே தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது விஷ வண்டுகள் கடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
விஷ வண்டுகள் கடித்தது
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 55). இவர் மரம் ஏறும் தொழிலாளி ஆவார். அருணாசலம் நேற்று மதியம் கோபி அருகே ஒத்தகுதிரையில் உள்ள ஒரு தோட்டத்தில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது மரத்தில் இருந்த விஷ வண்டுகள் அருணாசலத்தின் முகம் மற்றும் உடலில் பல இடங்களில் கடித்துள்ளது. இதில் வலியால் அவர் அலறி துடித்தார்.
தொழிலாளி சாவு
உடனே அவர் மரத்தை விட்டு கீழே இறங்கினார். பின்னர் அங்கிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றதும் அவர் எதிர்பாராதவிதமாக மயக்கம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அருணாசலம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இறந்த அருணாசலத்துக்கு சுப்பாயாள் என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர்.