பள்ளி மாணவர்களுக்கான போக்சோ விழிப்புணர்வு முகாம்


பள்ளி மாணவர்களுக்கான  போக்சோ விழிப்புணர்வு முகாம்
x
திருப்பூர்


மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான போதை ஒழிப்பு மற்றும் போக்சோ குறித்த விழிப்புணர்வு முகாம் சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்ம பிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். அப்போது பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து விளக்கினார்கள். போதை பொருள் விற்பனை செய்வதும், வாங்கி பயன்படுத்துவதும் தண்டனைக்குறிய குற்றமாகும். அதனால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போதைப் பொருட்களின் பயன்பாட்டை தடுத்து நல்ல எதிர்கால மாணவ சமுதாயத்தை காப்பாற்ற மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள். பிறகு முகாமில் பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீதிபதிகள் பதிலளித்தனர். அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். அப்போது வழக்கறிஞர் சித்ராபாண்ட்ஸ், பள்ளி தலைமையாசிரியர் மோகன்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story