கம்பம் கம்பராயப்பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா


கம்பம்  கம்பராயப்பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
x

கம்பம் கம்பராயப்பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது

தேனி

நவராத்திரி விழாவையொட்டி, கம்பத்தில் உள்ள கோவில் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பூஜை செய்து வருகின்றனர். அதன்படி கம்பம் கம்பராயாப்பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி வடபுறத்தில் அமைந்துள்ள சஷ்டி மண்டபத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்படுள்ளன. இதில் தமிழர்களின் கலாசாரத்தை நினைவுப்படுத்தும் விதமாக நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, கரகாட்டம் உள்ளிட்ட பொம்மைகள் இடம்பெற்றிருந்தன. மேலும் மழைநீர் சேகரிப்பு, தெப்பகுளம், பள்ளிக்கூடம், கிளி ஜோதிடம், சலவை தொழில், 12 ஆழ்வார்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளும், பழனி முருகன் கோவில், திருச்சி உச்சி பிள்ளையார். திருக்கைலாயம், ருத்ராட்ச லிங்கம் உள்ளிட்ட சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. விழாவில் தினந்தோறும் காசி விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Next Story