வேப்பனப்பள்ளியில் போலீசார் தீவிர வாகன தணிக்கை
வேப்பனப்பள்ளியில் போலீசார் தீவிர வாகன தணிக்கை
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு, கஞ்சா விற்பனை, வாலிபர்கள் அதிக வேகத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் செல்லுதல் உள்ளிட்ட குற்ற செயல்கள் நடப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உத்தரவின்பேரில் போலீசார் நேற்று நகரின் மைய பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் சந்தேகத்திற்கு உரிய வகையில் வரும் நபர்களை சோதனை செய்து அவர்களின் ஆவணங்களை பரிசோதித்தனர். அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story