வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்
வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா வாணியக்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் பொன்னையா (வயது22). இவர் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள நோக்கம் கோட்டை கிராமத்தில் வசித்து வருகிறார். பொன்னையா வுக்கும் பெரியார் நகரை சேர்ந்த லூர்துசாமி மகன் ராகேஸ், இதே ஊரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் சூர்யா (22), கோவிந்த், வேளாணி மகன் சசி (22), மருதம்பச்சேரியை சேர்ந்த தாஸ் மகன் ஆகிய 5 பேருக்கும் இடையே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்னையா அழுந்தி கோட்டை கிராமத்தில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது 5 பேரும் பொன்னையாவை வழிமறித்து உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து 5 பேரை தேடி வருகின்றனர்.